FAQ

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

செய்கடமை என்பது இரு சொற்களை இணைத்து உருவாக்கிய ஒரு சொல்லாகும். இந்த இக்கட்டாக சூழ்நிலையில் எமது உயிர்களுக்கு முன்னுரிமையளித்து கடமையாற்றி இலங்கை அரசாங்கத்தின் பணிகளுக்கு நாம் மதிப்பளித்து செய்ய வேண்டிய கடமைகளுக்கு விடுக்கும் அழைப்பே இது.

கோவிட் -19 மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூக நலத் திட்டங்களை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் மேதகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் நிறுவப்பட்ட கோவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதிக்கான நிதி திரட்டும் முயற்சியாக ‘செய்கடமை’ திட்டம் உள்ளது. ஜனாதிபதியின் நிதியிலிருந்து ரூ. 100 மில்லியன் நன்கொடையுடன் இந்த நிதி நிறுவப்பட்டது. கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்படவுள்ள முக்கியமான சுகாதாரத் தேவைகளை இந்த நிதி பூர்த்தி செய்யும் மற்றும் சுகாதார அவசர நிலைகளுக்கான இலங்கையின் நீண்ட கால தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கினை கொண்டது.

கோவிட் 19 ஆல் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அரசு உதவுவதலும், சுகாதாரத் துறையில் உள்ளவர்கள் மற்றும் பிற அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நிதியின் முதன்மை மற்றும் உடனடி குறிக்கோளாக இருக்கும். தற்போதைய சுகாதார திறன்களில் உள்ள பாதிப்புகளைக் குறைப்பதன் மூலம் தொற்றுநோய்களுக்கான தேசிய தயார்நிலையை மேம்படுத்துவதில் முக்கியமான முதலீடுகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியை பொலிஸ்மா அதிபர், அமைச்சகங்களின் செயலாளர்கள், சுகாதார மற்றும் தணிக்கை மற்றும் வங்கி வல்லுநர்கள் உள்ளிட்ட சுகாதார, பொது நிர்வாகம் மற்றும் நிதி நிபுணர்களின் மேலாண்மைக் குழு நிர்வகிக்கும்.

WHO, UNICEF, UNDP உலக வங்கி, ADB மற்றும் இலங்கையின் முக்கிய அபிவிருத்தி கூட்டாளர் சமூகம் மற்றும் இணக்கமான தேசிய கொள்முதல் முறை மற்றும் ஆளுகை மற்றும் வள ஒதுக்கீட்டில் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நிதி திரட்டப்படும்.

மேலாண்மை குழு

இந்த நிதியை மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி லக்ஷ்மன் தலைமையிலான 17 பேர் கொண்ட குழு நிர்வகிக்கும்.
1. பேரா. டப்ள்யூ.டீ. லக்ஷ்மன் - மத்திய வங்கி ஆளுனர்
2. திரு. ரவீந்திர ஜே விமலவீர – பிரதான நிதி அலுவலகர், சனாபதி செயலகம்.
3. திரு. எஸ்.ஆர் ஆட்டிகல – நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்.
4. மேஜர் ஜெனரல். ஜீ.டீ.எச். கமல் குணரத்ன – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.
5. திரு. எஸ்.எஸ். ஹெட்டியாரச்சி – பொதுநிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர்.
6. திருமதி. ஹதானி ஜயவர்தன – சுகாதார மற்றும் மருந்துகள் அமைச்சின் செயலாளர்.
7. திரு. சந்தன டி விக்கிரமரத்ன – பொலிஸ் மாஅதிபர் (பதில்)
8. வை. அனில் ஜயசிங்க – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்.
9. மேஜர் ஜெனரல் ஜீ. விஜித ரவீந்திரியா - இலங்கை சுங்கம் பணிப்பாளர் நாயகம்
10. திரு. நுஷாட் எம் பெரேரா - இலங்கை சதோச தலைவர்.
11. திரு. சிறியன் டி சில்வா விஜேரத்ன – ஊழியர் நம்பிக்கை நிதியம் தலைவர்.
12. திருமதி. பி.டி. இந்திக விஜேகுணவர்தன – சனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர்
13. திரு. ஹரிகுப்தா ரோஹனதீர – பணிப்பாளர் நாயகம் (சட்டம்) சனாதிபதி செயலகம்
14. திரு. என்.டப்ள்யூ.ஜீ.ஆர்.டீ நாணயக்கார – துணை ஆளுனர் இலங்கை மத்திய வங்கி
15. திரு. டப்ள்யூ.பி. ருசெல்லா பொன்சேகா – சிரேஷ்ட பிரத பொது முகாமையாளர் இலங்கை வங்கி
16. திரு. எஸ். ஸ்வர்னஜோதி – முன்னால் கணக்காய்வு நாயகம்
17. திரு. ஜே.எம்.எஸ்.ஜீ. ஜயசுந்தர – கொழும்பு உயர்நீதிமன்ற முன்னால் நீதியரசர்.

ஆகியோர் அடங்குவர்.

கோவிட் - 19 தாக்கம் தொடங்கியதிலிருந்து சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதிக்கு சர்வதேச, பெரு நிறுவன, தனிநபர் மற்றும் நேரடி நன்கொடைகள் தாராளமாக வந்துள்ளன. எவ்வாறாயினும், இந்த தொற்றுநோயை நாங்கள் நிர்வகித்து சமாளிப்பதால் வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் நிறைய தயார்படுத்தல்கள் வேண்டியிருப்பதால் இந்த நிதி தொடர்ந்து வளர வேண்டியது அவசியமாகும்.

தற்போது ரூ. 900 மில்லியனை தாண்டியுள்ளதுடன் தினமும் அதிகரித்து வருகின்றது.
தற்போதைய நிதி மிகுதியை அறிய விஜயம் செய்யுங்கள்: https://www.itukama.lk/

ஆம்

கோவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான நன்கொடைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொடையாளர்களிடம் வரவேற்கப்படுகின்றது.

“கோவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதி” என்ற பெயரில் இலங்கை வங்கியின் வர்த்தகக் கிளையில் 85737373 என்ற கணக்கு இலக்கத்தைக் கொண்ட விசேட கணக்கொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்போதே நன்கொடை செய்ய : https://www.itukama.lk/donate-now/

1. சுகாதார வசதிகள், மருந்துகள், சோதனை உபகரணங்கள் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட கோவிட் -19 ஐ நிர்வகிப்பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேற்கொண்ட செலவு

2. சுகாதாரத் துறை ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கான வசதி மற்றும் தற்போதைய தொற்றுநோய்களின் போது அத்தியாவசிய பொது விநியோக சேவைகளை வழங்க பணிபுரியும் அனைத்து தளவாட வழங்குநர்களும்.

3. குழந்தைகள், பெண்கள், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அடையாளம் காணக்கூடிய பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு அடிப்படை அத்தியாவசியங்களை வழங்குதல்.

4. பொது சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் கிராமப்புற மருந்தகங்கள், சோதனை மற்றும் சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட தொற்றுநோய்களின் தேசிய ஆபத்தை குறைத்தல்.

5. உடல்நலம் மற்றும் சுகாதாரத்தில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துதல், உள்நாட்டு மருத்துவம் மற்றும் உள்நாட்டு மூலப்பொருட்களின் பயன்பாடு உள்ளிட்டவை.
6. உலகளவில் விற்பனை செய்யக்கூடிய பாதுகாப்பு ஆடை மற்றும் துப்புரவு தயாரிப்புகளில் உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிக்கவும்.
7. ஊடகங்கள் மற்றும் கல்வித் திட்டங்கள் மூலம் ஆரோக்கியமான வாழ்வை மேம்படுத்துதல்.

ஆம். எமக்கு உங்கள் கோரிக்கையை மின்னஞ்சல் செய்யுங்கள். partnerships@itukama.lk